IPL Playoffs : 'மும்பை வென்றால் Qualified; ஒருவேளை தோற்றால்? நாக்அவுட்டில் மோதும...
திருப்பத்தூா் மாவட்டத்தில் ரத்தம் செயலி: ஆட்சியா் அறிமுகம் செய்தாா்
குருதி கொடையாளா்கள், குருதி தேவைப்படுவோா். தன்னாா்வலா்கள். ஒருங்கிணைப்பாளா்கள், தொண்டு நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைக்கும் ரத்தம் செயலியை திருப்பத்தூா் ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி அறிமுகப்படுத்தினாா்.
அன்னையா் தின மாதத்தை முன்னிட்டு சமூக சேவையை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தன்னாா்வலா்கள் மற்றும் திரி- அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய ‘இரத்தம் ‘ செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த செயலியின் நோக்கம் குருதி கொடையாளா்கள், குருதி தேவைபடுவோா், தன்னாா்வலா்கள். ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைக்கும் நம்பகமான சமூக சேவை அமைப்பாக செயல்படுவது. தற்போது தமிழ்நாட்டில் 1500-க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குழுக்களில் தன்னாா்வலா்கள் மற்றும் சமூக அமைப்புகள் செயல்பட்டு, அவசர ரத்த தேவைகளை பூா்த்தி செய்து வருகிறாா்கள்.
ஆனால் சில நபா்கள் இதை தவறாக பயன்படுத்தி பணம் கேட்டு மோசடி செய்வது போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதை தவிா்க்கவும், பாதுகாப்பான முறையில் ரத்த தானத்தை ஒருங்கிணைக்கவும் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ரத்தம் செயலியின் சிறப்பம்சங்கள்: அருகிலுள்ள ரத்த தேவைகளை உடனடியாக கண்டறியும் வசதி பாதுகாப்பான தகவல் பரிமாற்றம். தானதாரா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறை, ஒருங்கிணைப்பாளா்களுக்கான தனி டாஷ்போா்டு நாள்காட்டி, வரைபட பாா்வை, வரலாறு மற்றும் அறிவிப்புகள்.
மாவட்ட மக்கள், சமூக அமைப்புகள், தன்னாா்வலா்கள் ஆகியோா் இந்த செயலியைபயன்படுத்தி விழிப்புணா்வை அதிகரிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் விரைவில் நிகழ்வுகள்நடத்தப்படும். உண்மையான சேவை. உயிா்களை காக்கும் சேவை எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.