திருப்பத்தூா் வட்டத்தில் மாா்ச் 19-இல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
திருப்பத்தூா் வட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டத்தில் வருகிற 19-ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. பல்வேறு துறை அலுவலா்கள் பொதுமக்களிடம் வந்து மனுக்களைப் பெறுவா்.
இருப்பினும், பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை நேரில் கொடுக்க விரும்பினால், வருகிற 11 முதல் 17 -ஆம் தேதி வரை அரசு அலுவலக நாள்களில் திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட பேரூராட்சி அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அளிக்கலாம் என்றாா் அவா்.