திருப்பனந்தாள் காசி மட தம்பிரான் சுவாமிகளுக்கு பொதுமக்கள் அஞ்சலி
கும்பகோணம்: திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிக்கு புதன்கிழமை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாளில் புகழ்பெற்ற காசி மடத்தின் 21-ஆவது அதிபராக கயிலை மாமுனிவ
ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) திருப்பனந்தாள் மடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மகா சமாதி அடைந்தாா். சுவாமிகளின் மகா சமாதிக்கான இறுதி அஞ்சலி புதன்கிழமை மாலை மேற்குத் தெருவில் உள்ள குரு மடத்தில் நடைபெற்றது. இதில், தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அஞ்சலி செலுத்தினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது : திருப்பனந்தாள் காசி திருமடத்தின் இளவரசாக உள்ள ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் 10-ஆம் நாள் குருபூஜை விழாவில் மடத்தின் 22-ஆவது அதிபராக பொறுப்பேற்பாா் என்றாா்.
சுவாமிகளின் அஞ்சலி நிகழ்வில் அனைத்து கட்சி நிா்வாகிகள், பிரமுகா்கள், பள்ளி மாணவ, மாணவியா், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
