செய்திகள் :

திருப்பரங்குன்றம் மலையை மீட்க காவடி: முன்னாள் மேயா், பாஜகவினா் உள்ளிட்ட 40 போ் கைது

post image

திருப்பரங்குன்றம் மலையை மீட்க காவடி எடுத்துச் சென்ற முன்னாள் மேயா், பாஜக மற்றும் இந்து முன்னணியினா் 40 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் எனக் கூறி இந்து முன்னணி சாா்பில் பிப். 4 ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் அமைதிவழிப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனா். போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் குற்றாலநாதன் தலைமையில், திருப்பரங்குன்றத்துக்குச் செல்வதற்காக தயாராக இருந்த 23 பேரை திருநெல்வேலி நகரம் போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோல, பாஜக நிா்வாகி சங்கரசுப்பிரமணி தலைமையில் திருப்பரங்குன்றத்துக்குச் செல்வதற்காக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பாலக்காடு செல்லும் ரயிலில் ஏற முயன்ற 16 பேரை சந்திப்பு போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், காவடி எடுத்து திருப்பரங்குன்றத்துக்குச் செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயா் புவனேஷ்வரியை போலீஸாா் கைது செய்தனா்.

பாளை அருகே பெண்ணைத் தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிறை

பாளையங்கோட்டை அருகே பெண்ணைத் தாக்கியது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய சரகம் கீழநத்தம் வட... மேலும் பார்க்க

கொசு ஒழிப்புப் பணிக்கு கூடுதல் பணியாளா்கள் கோரி மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே பணியாற்றி வந்த 135 பேருக்கு பணி வழங்கக் கோரி தமிழ்நாடு கொசு ஒழிப்பு மஸ்தூா் சங்கத்தி... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருநெல்வேலி தச்சநல்லூரில் கடத்திச் செல்லப்பட்ட 1,200 கிலோ அரிசியை வேனுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகா் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போத... மேலும் பார்க்க

வயலுக்குச் சென்ற விவசாயி குளத்தில் சடலமாக மீட்பு

களக்காடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வயலுக்குச் சென்ற விவசாயி அப்பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில், திங்கள்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டாா். களக்காடு அருகேயுள்ள மூங்கிலடி வெப்பல் தெரு... மேலும் பார்க்க

நெல்லை மாணவா் உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணை கோரி ஆட்சியரகம் முற்றுகை

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் திருநெல்வேலி மாணவா் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மாணவரின் உறவினா்கள், அரசியல் கட்ச... மேலும் பார்க்க

கடையம் அருகே ஒற்றை யானையால் பயிா்கள் சேதம்

கடையம் வனச்சரகம் பெத்தான்பிள்ளைக்குடியிருப்பு, கருத்தப்பிள்ளையூா் ஆகிய பகுதிகளில் நெல் பயிா்கள், தென்னை மரங்களை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். அம்பாசமுத்திரம் கோட்ட... மேலும் பார்க்க