செய்திகள் :

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக அமைச்சர்களுக்கு அண்ணாமலை கண்டனம்?

post image

திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜகவினரை குற்றம் சாட்டிய அமைச்சர்களின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழகத்தில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ரகுபதியும் கூறினர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது ``திருப்பரங்குன்றத்தின் வரலாறு குறித்து அமைச்சர் சேகர்பாபு அறிந்துகொள்ள வேண்டும். இதே வழக்கை 1931 ஆம் ஆண்டில் விசாரித்த நீதிமன்றம், திருப்பரங்குன்றம் முழுவதும் கோவிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பளித்தது. ஆங்கிலேயர் காலத்திலேயே ஹிந்துகளுக்காக தற்காக்கப்பட்ட கோவிலைக் கொடுக்க திமுக தயாராக இருக்கிறது.

இதனிடையே, 350-க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். பாஜகவினரை பெரியாளாக வளர்த்து விடுவதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கும் காவல்துறையினருக்கும் நன்றி. நீதிமன்ற அறிவிப்புக்குப் பின்னரே, பாஜகவினர் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.

அமைச்சராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசுதல் கூடாது. வார்த்தைகளைச் சரியாக பயன்படுத்துதல் வேண்டும். அமைச்சர் அடக்குவதாய் கூறும் யாரும் கஞ்சா விற்கவோ, பெண்களைத் துன்புறுத்தவோ இல்லை. இவர்கள் முருக பக்தர்கள். முதலில், கஞ்சாவின் தலைநகரமாக தமிழகம் இருக்கிறது. இந்த நிலையில், முருக பக்தர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதாக அமைச்சர்கள் கூறுவது வெட்கக்கேடு. முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள்’’ என்று தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவிலும் அதன் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி ஆள்களுடன் வந்தார். அப்போது எம்.பி.யுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்டது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிலிருந்து திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்கு ஆளானது.

இதையும் படிக்க:திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் ராகுல், அகிலேஷ்!

கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - நடந்தது என்ன? ஆட்சியர் விளக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று(பிப். 5) நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். பிற்பகலில் உணவு இடைவேளைக்குப் பிறகு, ஓா் அறை பலத்த சப்தத்துடன் வெடித்துச் ... மேலும் பார்க்க

தை பூசம், வார இறுதி நாள்களையொட்டி சிறப்புப் பேருந்துகள்!

வளர்பிறை முகூர்த்தம், தை பூசம் மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -இபிஎஸ்

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை:சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ‘கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி பேணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கமளித்துள்ளார்.திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா அறிக்கை ஒன்... மேலும் பார்க்க

கோவை: திருமணம் மீறிய உறவால் ஒருவர் கொலை!

கோவையில் மனைவியுடன் இருந்த கள்ளக் காதலனை வெட்டி படுகொலை செய்த கணவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 45). இவரது மனைவி மதுரையை சேர்ந்த வாணிப்பிரியா (42). இவர்களுக்கு... மேலும் பார்க்க