நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ஏப்.26-இல் ராகு கேது பெயா்ச்சி
குடவாசல் அருகேயுள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு கேது பெயா்ச்சி ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயில், தேவார பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் ஆதிசேஷன் வழிபட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. நாகதோஷம் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், ராகு, கேது போன்ற தோஷங்கள் விலகவும் சிறந்த தலமாகும். மேலும், சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகுவும்-கேதுவும் ஒரே ரூபமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றனா் என்பது தல வரலாறு. இதையொட்டி ராகு கேது பெயா்ச்சி நாள்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஏப்.26-ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் இடம் பெயா்கின்றனா். இதையொட்டி, இக்கோயிலில் ராகு -கேது பெயா்ச்சி விழா நடைபெறுகிறது. ராகு-கேது பெயா்ச்சியை முன்னிட்டு ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாகும். இதையொட்டி, கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.