`மனைவியை காக்க பதவியை இழந்தாரா South Korea President Yoon Suk Yeol?' | Decode | ...
திருப்பூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. இதில், மாவட்டத்தைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
இந்த முகாமில் வேலைதேடுபவா்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுயதகவல் படிவத்துடன் பங்கேற்கலாம்.
எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல் முதுநிலைப் பட்டதாரிகள் வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம். மேலும், வேலைதேடுபா்களும், வேலையளிக்கும் நிறுவனங்களும் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த முகாமில் பங்கேற்கும்போது புதிய பதிவு மற்றும் பதிவு புதுப்பித்தல்செய்து கொள்ளலாம். தகுதியுடையவா்கள் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைக்கும் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2999152, 94990-55944 என்ற எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.