செய்திகள் :

திருமணம் கைகூடும் திருநல்லம்

post image

ஆணோ, பெண்ணோ ஒவ்வொருவர் வாழ்விலும் திருமணம் என்பது இனிமையான, இன்றியமையாத நிகழ்வாகும். திருமணம் கைகூடும் திருநல்லம் எனப் புராணங்கள் புகழும் நாகை மாவட்டம், கோனேரிராஜ

புரத்தில் உள்ளது அருள்மிகு உமாமகேஸ்வரர் கோயில். கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவியால் கற்றளியால் கட்டப்பட்ட இக்கோயிலை பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே தரிசிக்க முடியும் என்பது அப்பரின் வாக்கு.

திருமணக் கோலத்தில் இருக்கும் ஸ்ரீகல்யாண

சுந்தரேஸ்வரருக்கு அன்னை பராசக்தியை மகாவிஷ்ணு தாரை வார்த்துக்கொடுக்கும் காட்சி இத்தலத்தின் சிறப்பு. ஜாதகத்தில் களத்திர தோஷமிருந்து திருமணம் நின்று

போனவர்களும், தள்ளிப்போனவர்களும் இங்குள்ள இறைவனையும் இறைவியையும் தரிசித்தால் விரைவில் திருமணப்பேறு அமையும் என்பது நம்பிக்கை. மேலும் இவர்களை வழிபட்டால் உடல்நலம் பெறும் . எமபயம் நீங்கும்.

காவிரித் தென்கரையில் 34 ஆவது சிவத்தலம். புரூரவஸ் என்னும் மன்னன் இத்தலத்தில் உமா மகேஸ்வரரை வழிபட்டு தோல் நோய் நீங்கப் பெற்றான். மனம் மகிழ்ந்த மன்னன் தனது காணிக்கையாக மூலவரின் விமானத்தை தங்கத் தகடால் அலங்கரித்தான். இங்குள்ள நடராஜப் பெருமான் மிகப் பெரிய பஞ்சலோகத் திருமேனி.

நளமகராஜன் தமயந்தியுடன் திருநள்ளாறு செல்லும் முன் இவ்வாலயம் வந்து வழிபட்டுச் சென்றுள்ளான். இங்கு சனிபகவான் கறுப்பு நிற ஆடைக்குப் பதிலாக வெள்ளை நிற ஆடை அணிந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் தீபம் போட்டால் எல்லா தோஷங்களும் விலகும். ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகமும் மார்கழித் திருவாதிரையும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தேவர்கள், முனிவர்கள், அகத்தியர், அக்னிபகவான், நவகிரகங்கள் வழிபட்ட திருத்தலம் இது.

உ.இராசமாணிக்கம்

கவலைகளைப் போக்கும் மாரியம்மன்

திருப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அவிநாசிக்கு மேற்கில், அன்னூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது கருவலூர். இங்குள்ள கருமாரியம்மன் கோயில், புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்று.அவிநாசி ... மேலும் பார்க்க

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)தொழிலில் லாபம் கிட்டும். சுபகாரியங்கள் சிறப்பாக நடந்தேறும். மனதிற்கினிய பயணம் மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் கருணையுடன்... மேலும் பார்க்க

பாலவாக்கம் வேம்பு அம்மன்!

தமிழகத்தின் தனிச்சிறப்பு கிராமங்களைப் பாதுகாக்கும் சிறு தெய்வங்கள். அந்த வகையில் அன்றைய கிராமமாகத் திகழ்ந்த சென்னையை அடுத்த பாலவாக்கத்தின் கிராம தேவதைகளில் ஒன்றாக விளங்குபவள் வேம்புலி அம்மன். இன்றைக்க... மேலும் பார்க்க

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 29 - 4) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)நீடித்துக்கொண்ட... மேலும் பார்க்க

இடைக்காட்டு சித்தர் வழிபடும் சிவன்!

தமிழ் சித்த மருத்துவ மரபில் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள் பதினெண் சித்தர்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் இடைக்காடர். அவர் வழிபட்ட சிவாலயம், கடப்பாக்கம் அருணாசலேஸ்வரர் கோயில். இது கிழக்கே பக்க... மேலும் பார்க்க

குழந்தைப்பேறு அருளும்...

"சோமுகன் என்ற அசுரன் கடும் தவம் மேற்கொண்டு வரங்களையும், அழியாத ஆயுளையும் பெற்றான். இதனால் பூமியையும், தேவலோகத்தையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவர ஆசைப்பட்டான். படைக்கும் தெய்வமான பிரம்மனை சிறைபிடி... மேலும் பார்க்க