செய்திகள் :

`திருமண நாள் அன்றே எங்கள் குட்டி தேவதையை வரவேற்கிறோம்’ - மீண்டும் அப்பா ஆனார் விஷ்ணு விஷால்!

post image

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பிஞ்சு விரல் புகைப்படத்தை பகிர்ந்து இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

`வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு விஷ்ணு விஷால் அறிமுகமானார். அதன் பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். கடைசியாக அவர் நடிப்பில் `லால் சலாம்’ திரைப்படம் வெளியானது.

இதற்கிடையே விஷ்ணு விஷால் ரஜினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். கருத்துவேறுபாடு காரணமாக விஷ்ணுவும், ரஜினியும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

Baby Girl

அதன் பின்னர் இவர் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இந்த தம்பதி நான்காம் ஆண்டு திருமண நாளில் தங்களின் பெண் குழந்தையை வரவேற்கின்றனர்.

தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக குழந்தையின் கைவிரல்களின் புகைப்படத்தை x பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் விஷ்ணு விஷால்.

தனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் தன்னுடைய முதல் மகன் ஆரியன் அந்த குழந்தையை பார்த்து அழகாக சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

113 ஆண்டுகளை தொட்ட டைட்டானிக்; ஆனாலும், அடங்காத ஆச்சர்யங்களைக் கூறும் ஆவணப்படம்!

இருந்த போதும் சரி... இல்லாத போதும் சரி... மக்களை தொடர்ந்து ஆச்சர்யங்களில் 'மூழ்'கடித்து வருகிறது டைடானிக் கப்பல். 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பெரும் கனவுகளோடு கிளம்பிய டைட்டானிக் கப்பல் அடுத்த ஐந்... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மைத்துனி தொடர்ந்த வழக்கு; ரத்து செய்யக் கோரி நடிகை ஹன்சிகா மனு!

பாலிவுட் நடிகை ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி என்பவரை முஸ்கான் நான்சி என்பவர் திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இருவருக்கும்... மேலும் பார்க்க

"நான் ஜிம் ஆரம்பிக்க காரணம் இதுதான்" - நடிகர் மணிகண்டன் பேட்டி

'மெட்ராஸ் ஃபிட்னெஸ்' ஜிம்மை தொடங்கி, தனக்கு ஃபிட்டான மற்றொரு புது ரூட்டை எடுத்துள்ளார், நடிகரும் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனுமான மணிகண்டன். நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் ஃபிட்னெஸ்' சென்டர் ... மேலும் பார்க்க

எம்புரான் : `கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான கருத்து’ - 17 மாற்றங்கள் செய்தும் ஓயாத சர்ச்சை

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்த எம்புரான் சினிமா கடந்த மாதம் 27-ம் தேதி மலையாளம், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸ் ஆனது. சினிமா ரிலீஸ் ஆன மறுநாளில் இருந்தே குஜராத்தில் நடந்த கலவரம் ... மேலும் பார்க்க

எம்புரான் : `பாசிசத்தின் புதிய வெளிப்பாடு' - சங்பரிவாருக்கு எதிராக கொதித்த பினராயி விஜயன்

மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் சினிமா கடந்த 27-ம் தேதி ரிலீஸ் ஆனது. லூசிஃபர் சினிமாவின் இரண்டாம் பாகமான எம்புரான் ஹாலிவுட் சினிமாவுக்கு இணையாக உள்ளதாக மலையாள திரை உலகில் கொண்டாடப்படுகிறது. ... மேலும் பார்க்க