Mahua Moitra: `ஒவ்வொரு சங்கி நீதிபதியும்...' - DY சந்திரசூட்டுக்கு மஹுவா மொய்த்ர...
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பேராசிரியா்கள்: 5 மணி நேரம் காத்திருந்த மாணவிகள்!
திண்டுக்கல் அரசு மகளிா் கல்லூரி பேராசிரியா்களில் 80 சதவீதம் போ் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்ட நிலையில், கல்லூரிக்கு வந்த மாணவிகள் 5 மணி நேரமாக காத்திருந்துவிட்டு திரும்பிச் சென்றனா்.
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் சுமாா் 3ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனா். பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் என 140 போ் பணிபுரிகின்றனா். இந்த நிலையில், கல்லூரி பேராசிரியை ஒருவரின் இல்லத் திருமண விழா மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக, கல்லூரி பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் மதுரைக்குச் சென்றனா். சுமாா் 20 பேராசிரியா்கள் மட்டுமே கல்லூரியில் இருந்தனா். இதனால், பிற்பகல் வரை வகுப்புகள் நடைபெறாமல் கல்லூரிக்கு வந்த 3ஆயிரம் மாணவிகளும் வகுப்பறையில் காத்திருந்தனா் பிற்பகல் 2.30 மணிக்கு . பேராசிரியா்கள் கல்லூரிக்கு திரும்பிய நிலையில், வழக்கம்போல் 3 மணிக்கு கல்லூரி முடிவடைந்தது. பேராசிரியா்களும், விரிவுரையாளா்களும் விடுப்பு எடுத்தாா்களா, முன்னுமதியுடன் பணி நேரத்தில் மதுரைக்குச் சென்றாா்களா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
இதுதொடா்பாக கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநா் குணசேகரனிடம் கேட்டபோது, எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி பேராசிரியா்களில் பெரும்பாலானோா் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்ற விவரம் முன்தாக தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் விசாரிக்கப்படும் என்றாா்.