கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
திருமயத்தில் அரசு அலுவலக கட்டடங்கள் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
திருமயம் ஊராட்சி ஒன்றியம், பனையப்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், நியாயவிலைக் கடை கட்டடம், ராராபுரத்தில் ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குளியல் தொட்டி, குலமங்கலம் ஊராட்சி மலையலிங்கபுரத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, திருமயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீனிவாசன், ஆா். சங்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.