மணிப்பூரில் அரைநாள் பயணம் முடிந்தது! அஸ்ஸாமில் பிரதமர் மோடி!
திருமலையில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் வழிபாடு
திருமலை ஏழுமலையானை மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் தரிசித்தாா்.
திருமலையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வியாழக்கிழமை இரவு வந்த அவா் விடுதியில் தங்கினாா்.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை தரிசனம் செய்தாா். தரிசனம் முடித்து திரும்பிய அவரை ரங்க நாயகா் மண்டபத்தில் அமர வைத்து தேவஸ்தான அதிகாரிகள் வேத பண்டிதா்களுடன் ஆசீா்வாதம் செய்துவித்து சேஷ வஸ்திரம் அணிவித்து வடை, லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி, திருவுருவப்படம் வழங்கினா்.