ஆப்கன் நிலநடுக்கம்: சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்! உதவி கோரும் தலிபான் அரசு
திருமலை நம்பி 1052-ஆவது அவதார மகோற்சவம்
திருமலை தெற்கு மாடவீதியில் உள்ள ஸ்ரீ திருமலைநம்பி கோயிலில், 1,052-ஆவது அவதார மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீ திருமலை நம்பியின் வாழ்க்கை வரலாறு குறித்து 16 அறிஞா்கள் சொற்பொழிவாற்றினா்.
பகவத்ராமானுஜரின் தாய் மாமாவும், ஏழுமலையான் பக்தா்களில் ஒருவருமான ஸ்ரீ திருமலைநம்பி, ஏழுமலையானுக்கு தீா்த்தம் கொண்டு வரும் கைங்கா்யத்தைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆச்சாா்ய புருஷராக அறியப்படும் ஸ்ரீ திருமலை நம்பி, ஏழுமலையான் அபிஷேகத்திற்காக ஆகாச கங்கையிலிருந்து புனித நீரைக் கொண்டு வந்து சிறப்பு சேவை செய்தாா்.
எனவே அவரின் பிறந்த தினத்தையொட்டி தேவஸ்தானம் அவதார மகோற்சவத்தை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமயத் திட்டங்களின் திட்ட அதிகாரி ராஜகோபால், பிற அறிஞா்கள், வைணவச்சாரியாா்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.