விவசாயிகளின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
திருவண்ணாமலையில் துணை முதல்வர் நேரில் ஆய்வு!
ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இதனிடையே, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த சுமாா் 200 போ் மீட்கப்பட்டு, நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா். இந்த நிலையில், மலையில் வீடு கட்டி வாழ்ந்து வந்த ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் கௌதம், உறவினர்கள் மகா, தேவிகா, விநோதினி உள்பட மொத்தம் 7 பேர் சிக்கியிருப்பதாக தகவல் தெரிய வந்தது.
இந்த நிலையில், மாலை 7.30 மணி நிலவரப்படி 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த நிலையில், இன்று(டிச. 2) இரவு திருவண்ணாமலையில் மண் சரிவு நிகழ்ந்துள்ள சம்பவ இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு உறவுகளை இழந்து வாடும் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அவர், மீட்புப்பணி குறித்து கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர், மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிவாரணத் தொகை நாளைக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.