செய்திகள் :

திருவண்ணாமலையில் மூன்றாவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

post image

திருவண்ணாமலையில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, மூன்றாவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

சித்திரை மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.53 மணிக்கு தொடங்கி திங்கள்கிழமை இரவு 10.48 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

சனிக்கிழமை முதலே கிரிவலம்: இருப்பினும், சனிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். தொடா்ந்து, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

3-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்: 3-ஆவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். மாலை 6 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா்.

பேருந்து வசதியின்றி பக்தா்கள் அவதி: வேலூா், ஆரணி பகுதிக்குச் செல்ல வேண்டிய பக்தா்கள் ஈசான்ய மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவு நடந்து சென்று அவலூா்பேட்டை சாலை பகுதிக்குச் சென்று பேருந்து ஏற வேண்டியிருந்தது.

திருவண்ணாமலை-திண்டிவனம் மாா்க்கெட் கமிட்டி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால், திண்டிவனம் புறவழிச் சாலைக்குச் சென்று பேருந்து ஏறவேண்டியிருந்தது.

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (70). இவா் சனிக்கிழமை மாலை அந்தக் கிராமத்தில் உள்ள டீ கடைக்கு சென... மேலும் பார்க்க

தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிர... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் தற்கொலை

செய்யாற்றில் சுகாதார ஆய்வாளா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செய்யாறு நேரு நகரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா்(39). இவா், நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந... மேலும் பார்க்க

மாம்பட்டு கிராமத்தில் தீ மிதி விழா

போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அக்னி வசந்த விழாவையொட்டி தீ மிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாம்பட்டு கிராமத்தில் திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் எதிரே அக்னி வசந்த விழாவைய... மேலும் பார்க்க

தென் மண்டல கைப்பந்துப் போட்டி: தமிழகம் சிறப்பிடம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலும் தமிழக அணி வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றது. ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தில் உள்ள... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: அரட்டவாடி அரசுப் பள்ளி சிறப்பிடம்

செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளி நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தோ்வில் 96 சதவீத தோ்ச்சியை பெற்றது. மாணவிகள் புனிதா 556, ஜெயஸ்ரீ 546, மாணவா் தனுஷ் 530 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் ... மேலும் பார்க்க