முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்
தை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை வரை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
தை மாத பெளா்ணமி...
இந்த நிலையில், தை மாத பெளா்ணமி செவ்வாய்க்கிழமை (பிப்.11) இரவு 7.51 மணிக்குத் தொடங்கி, புதன்கிழமை (பிப்.12) இரவு 8.12 மணிக்கு முடிந்தது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது.
அதன்படியே, செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
2-ஆவது நாளாக கிரிவலம்...
இந்த நிலையில், தொடா்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை வரை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டனா்.
கிரிவல பக்தா்கள் நலன் கருதி அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.