செய்திகள் :

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

post image

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) தொடக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் பக்தர்களின் வசதிக்கேற்ப நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோயில்களில் ஒருவேளை அன்னதானம், நாள் முழுவதும் அன்னதானம், திருவிழா மற்றும் சிறப்பு நாள்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '2021 ஆம் ஆண்டிற்கு முன் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 754 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது. 

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான  அரசு பொறுப்பேற்ற பின், கடந்த நான்காண்டுகளில் கூடுதலாக 11 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 13 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது 764 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 3.5 கோடி பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

2025-2026 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமைகள் மற்றும் விழா நாள்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் இன்று (17.05.2025)  சனிக்கிழமை  நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 

இதனடிப்படையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகள், புரட்டாசி மாதம் முழுவதும் அனைத்து நாள்களிலும், பார்த்தசாரதி சுவாமி திருத்தேரோட்டம், நரசிம்மர் சுவாமி திருத்தேரோட்டம், மாசிமகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய 82 நாள்களில் வடை, பாயசத்துடன்  நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மேற்குறிப்பிட்ட நாட்களில் ஆண்டொன்றுக்கு திருக்கோயிலுக்கு வருகை தரும் 82,000 பக்தர்கள் பயன்பெறுவார்கள். 

இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, அரசு அலுவலர்கள், மக்கள் கலந்து கொண்டனர். 

மின்சார பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்கர்

மின்சார பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சென்னை வியாசர்பாடி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் போக்குவரத்து மற்றும் ம... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இரவு 7 மணி வரை தமிழ... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

டாஸ்மாக் ஊழல் தொடர்பான 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். டாஸ்மாக் நிறுவனத்தில் பணியிட மாற்றம், போக்குவரத்து ஒப்பந்தம், ... மேலும் பார்க்க

தில்லி எசமானர்களைக் காப்பாற்ற அவதூறை அள்ளி வீசுகிறார் இபிஎஸ்! - ஆர்.எஸ். பாரதி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தில்லி எசமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். தனியார் பள்... மேலும் பார்க்க

சூப்பர்பெட் செஸ் கிளாசிக் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் செஸ் கிளாசிக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ருமேனி... மேலும் பார்க்க

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை!

சென்னை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதே தடை உத்தரவை மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும் பிறப்பித்துள்ளது. மேலும் பார்க்க