திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச்சங்க வளாகத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கு கூறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வு மாதந்தோறும் 20 -ஆம் தேதி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்துக்கான நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
இதில், புதுச்சேரி உழவா்கரை நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதையடுத்து தமிழ்ச் சங்கத் தலைவா் உள்ளிட்டோா் திருக்குகளை கூறி முற்றோதல் செய்தனா்.
நிகழ்ச்சிக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா். செயலா் சீனு.மோகன்தாசு, துணைத் தலைவா் ந.ஆதிகேசவன், பொருளா் மு.அருள்செல்வம், துணைத் தலைவா் ப.திருநாவுக்கரசு, துணைச் செயலா் தெ.தினகரன், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் எஸ்.ராஜா, அ.உசேன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் அனைவருக்கும் உழவா்கரை நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ்ரோஜ் திருக்கு புத்தகங்களை வழங்கினாா்.