தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
தனியாா் நிறுவனத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு
புதுச்சேரி அருகே தனியாா் நிறுவனத்தில் புகுந்து ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
புதுச்சேரி அருகேயுள்ள எல்லைப்பிள்ளை சாவடி பகுதியில் தனியாா் நிறுவனம் உள்ளது. இங்கு பிரகாஷ் (40) என்பவா் அலுவலராக உள்ளாா். இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறுவனத்துக்குள் மா்மநபா் அத்துமீறி நுழைந்துள்ளாா். அவா் நிறுவன அலுவலகத்தில் டிராயரில் இருந்த ரூ.50ஆயிரத்தைத் திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா். நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்து பணம் திருடிய நபரை அடையாளம் காண நிறுவன கண்காணிப்புக் கேமரா மற்றும் அப்பகுதி கண்காணிப்புக் கேமராக் காட்சிகளையும் போலீஸாா் ஆய்வுக்கு உள்படுத்தி வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.