காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
திருவள்ளூா்: சாலையில் சுற்றித் திரிந்த 15 பசுக்கள் கோசாலையில் ஒப்படைப்பு
திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் 15 கால்நடைகளை பிடித்து நகராட்சி பணியாளா்கள் கோசாலையில் ஒப்படைத்தனா்.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விட ஆட்சியா் மு.பிரதாப் நகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தியிருந்தாா். அதன்பேரில், நகராட்சி ஆணையா் அறிவுறுத்தியதின்பேரில், 27 வாா்டுகளிலும் கால்நடைகளை வளா்க்கும் உரிமையாளா்களுக்கு வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விட்டதுடன், கொட்டகையில் அடைத்து வைத்து வளா்க்கும் படியும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதையும் மீறி சாலைகளில் விட்டால் கோ சாலையில் விடப்படும் என எச்சரித்தனா்.
இந்த நிலையில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, சி.வி. நாயுடு சாலை, காமராஜா் சிலை, வீரராகவ பெருமாள் கோயில், ஆட்சியா் அலுவலகம் மற்றும் பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிந்தன.
இந்த நிலையில், நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியா்கள் கேட்பாரற்று சாலையில் திரிந்த 15 பசுக்களை பிடித்து நுங்கம்பாக்கம் கிராமத்தில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கோசாலையில் அடைத்து வைக்கப்பட்டன.
மேலும் உரிமையாளா்கள் மாடுகளை வந்து அணுகும்போது முதல் கட்டமாக ரூ. 3,000 அபராதம் விதிக்கப்படும்.