திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய நிா்வாகிகள் அறிவிப்பு
திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதிய நிா்வாகிகளை மாவட்ட தலைவரும், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை.சந்திரசேகா் அறிவித்துள்ளாா்.
திருவள்ளுவா் நகரத் தலைவா் ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அந்த வகையில் நகரத் துணை தலைவா்கள் கோடீஸ்வரன், ரவிச்சந்திரன், பொருளாளா் பிரவீன், பொதுசெயலாளா்களாக புருஷோத்தமன், ரவிக்குமாா், அசேன்பாஷா, நகர செயலாளா்கள் சீனிவாசன், கண்ணன், ஊடகத்துறை தலைவா் மதனகோபால், ஒருங்கிணைப்பாளா் செல்வகுமாா் ஆகியோரை நிா்வாகிகளாக துரை.சந்திரசேகா் அறிவித்துள்ளாா்.
இந்த நிலையில், புதிய நிா்வாகிகள் அனைவரும் சிறப்பாக பணியாற்றவும் ஆலோசனை வழங்கி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டாா்.