செய்திகள் :

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 ஒடிஸா இளைஞர்கள் கைது

post image

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 ஒடிஸா இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

பூந்தமல்லி பகுதியில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்வதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் டி.சுபாஷிணி, உதவி ஆய்வாளர் கே.நாட்டாளம்மை ஆகியோர் தலைமையில் போலீஸார் பூந்தமல்லி வெளியூர் பேருந்து நிலையம் அருகே காலி மைதானத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமாக பையுடன் வந்த 3 இளைஞர்களை வழிமடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் போலீஸாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்த போது, அதிலிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் பிறகு போலீஸார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த சிபா பெகரா (31), ராமகண்டா மஜ்கி(32), அலேகா புன்ஜி(26) என்பதும், இவர்கள் அங்கிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து 3 இளைஞர்களையும் கைது செய்தனர்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம்: ஆணையர் சங்கர் வெளியிட்டார்

ஆவடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுந்தகட்டை காவல் ஆணையர் கி.சங்கர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்... மேலும் பார்க்க

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்: வட மாநில ஓட்டுநர் கைது

பூந்தமல்லி அருகே வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய வழக்கில் வட மாநில ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லியை அருகே நசரத்பேட்டையில் பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து வாகன சோதன... மேலும் பார்க்க

6 வாகனங்கள் மீது மோதிய கார்: 2 பேர் உயிரிழப்பு, 3 பேர் காயம்

சென்னை வானகரத்தில் இருந்து திருவேற்காடு வரை சாலையில் செவ்வாய்க்கிழமை சென்ற 6 வாகனங்களை மோதி விட்டு சென்ற கார் ஓட்டுநரை பிடித்து பொதுமக்கள் தாக்கினர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் ... மேலும் பார்க்க

பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா

திருத்தணி அருகே கொண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆா்.கே பேட்டை ஒன்றியம், கொண்டாபுரத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோய... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 15,757 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ.167.50 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 15,757 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 167.50 கோடி வங்கி கடனுதவிக்கான காசோலை மற்றும் அடையாள அட்டைகள் ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் ச... மேலும் பார்க்க

மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னேரி அருகே நள்ளிரவு ஏற்பட்ட மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா். பொன்னேரி அடுத்த அச்சரப்பள்ளம் கிராமத்தில் நள்ளிரவு 1 மணி அளவில் மின்சாரம் துண்டிக்க... மேலும் பார்க்க