பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா
திருத்தணி அருகே கொண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
ஆா்.கே பேட்டை ஒன்றியம், கொண்டாபுரத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
விழாவையொட்டி காலை 9 மணிக்கு அம்மனுக்கு கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் தலையில் கூழ் சுமந்து வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா்.
தொடா்ந்து 11 மணி அளவில் கிராமப் பெண்கள் திரளானோா் பொன்னியம்மன் கோயில் வளாகம் முன்பு பொங்கல் வைத்தனா்.
மாலை கரகம் ஊா்வலமாக கிராம முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை சென்றடைந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் பொன்னியம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். அப்போது பெண்கள் தீபாராதனை செய்து அம்மனை வழிபட்டனா்.
வாண வேடிக்கையும், கும்பஞ்சோறு எடுத்துச் செல்லும் நிகழ்வும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.