பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்
திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
திருவள்ளூா் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். கோயிலில் ஆண்டுதோறும் 2 முறை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். கோயிலில் தை பிரம்மோற்சவத்துக்குப் பிறகு சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 10 நாள்கள் நடைபெறும் விழாவில் உற்சவா் வீரராகவா், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
அதன்படி வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு கொடியேற்றமும், 6.30 மணிக்கு தங்க சப்பரம் புறப்பாடும், 10 மணிக்கு வீதியுலாவும், 11 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 5 மணிக்கு சிம்ம வாகன பக்தி உலாவும் 7 மணிக்கு வீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதேபோல் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்வான வரும் 8-ஆம் தேதி அதிகாலையில் திருத்தோ் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
