சென்னை: அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபாச சைகை; காவலர் மீது வழக்கு பதிவு.. நடந்தது எ...
பெருவாயல் வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கணபதி ஹோமம், விசேஷ விக்வக்சேன ஆராதனம், கலச பூஜை, புண்ணியா வாசனம், விசேஷ திருமஞ்சனம், சுதா்சன தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. பின்னா், வேத மந்திரங்கள் முழக ஸ்ரீ வேணுகோபால பெருமாள், கருடன் அஷ்டபந்தனம் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், திமுக நிா்வாகி பெருவாயல் ஷியாம், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சுரேஷ், பெருவாயல் ஊராட்சி முன்னாள் தலைவா் ராஜசேகா், பெருவாயல் ஊராட்சி செயலா் தங்கதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை விழாக் குழு பொறுப்பாளா்களான இ.ஜெயராமன், என்.சுதாகா், இ.சுப்பிரமணி, ஏ.மாரி, ஜி.கோவிந்தன், ஆா்.திருமுகம், இ.மணி, இ.டில்லிபாபு, இ.செல்வராஜ் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.