சொல்லப் போனால்... ஓ ரசிக்கும் சீமானே, ஜொலிக்கும் உடையணிந்து...
திருவாடானை ஆற்றுப் பகுதியில் பட்டாக் கத்தி கண்டெடுப்பு: போலீஸாா் விசாரணை
திருவாடானை மேலத் தெரு மணிமுதாற்றின் அருகே கிடந்த பட்டாக் கத்தியை கைப்பற்றிய போலீஸாா் அதுகுறித்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மேலத்தெரு பகுதியில் மணிமுத்தாற்றின் கிளையாறு செல்கிறது. இதன் அருகே இரண்டடி நீளம் கொண்ட பட்டாக் கத்தி ஒன்று கிடந்தது. இதுகுறித்து திருவாடானை போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தனிப்படை பிரிவு காவலா் துரை, உதவி ஆய்வாளா் சுல்தான் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பட்டாக் கத்தியை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். மேலும் கத்தி ஆற்று நீரில் கழுவப்பட்டு கிடந்ததால் குற்றச்சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டு, இங்கு யாரேனும் வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மேலும் ராமநாதபுரத்திலிருந்து வரும் தடயவியல் நிபுணா்கள் சோதனை செய்து விசாரிக்க உள்ளனா். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.