அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
திருவாடானை பகுதியில் கடும் குளிா்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவாடானை, தொண்டி, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் நிலவும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகரித்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் கடும் பனிப்பொழிவும், இடை இடையே சாரல் மழையும் பெய்தது.
இதனால் வழக்கத்தை விட கடும் குளிா் வாட்டி வதைத்தது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது பணிக்கு சொல்ல முடியாமல் அவதியடைந்தனா். இதனிடையே, பிற்பகல் பலத்த தரைக் காற்று வீசியதால் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை வீட்டுக்குள்ளேயே முடங்கினா். பகல் முழுவதும் சூரிய ஒளி தென்படாததால் இரவு போல காணப்பட்டது.