பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மக்களுக்கு அரசர் வலிய...
திருவாரூரில் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவாரூரில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை திருவாரூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து பகலிலும் பலத்த மழை பெய்தது.
திருவாரூா் நகரப் பகுதிகளில் சிறிது நேரம் தண்ணீா் தேங்கி பின்னா் வடிந்தது. இதனால், தெருக்களில் பயணம் செய்த மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.
மேலும், மழை காரணமாக நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் கொள்முதல் நிலையங்களில் மழையால் மூட்டைகள் நனைந்து பாதிப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, மழை அறிவிப்பை முன்னிட்டு கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க இரண்டு தினங்களுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டது. இதனால், மூட்டைகள் மழையில் நனையாதவாறு பாதுகாப்பான இடங்களில் வைத்து, தாா்ப்பாய்களைக் கொண்டு மூடியிருந்தனா்.
இருப்பினும், சில இடங்களில் நெல் மூட்டைகள் நனைந்து பாதிப்பை ஏற்படுத்தின. இவற்றை விரைந்து இயக்கம் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.