திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு!
திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை கலந்துகொண்டுள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று பகல் தனி விமானம் மூலம் திருச்சி வந்த குடியரசுத் தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
திருச்சியில் இருந்து இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் திருவாரூா் சென்ற திரெளபதி முர்மு, நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டுள்ளார்.
பல்கலைக்கழக வேந்தா் ஜி. பத்மநாபன் தலைமையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவா் திரௌபதி முா்மு உரை நிகழ்த்தி, பட்டங்களை வழங்கி வருகிறார்.
பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி, புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், தமிழ்நாடு அமைச்சா்கள் கோவி. செழியன், கீதா ஜீவன் ஆகியோா் பங்கேற்றுள்ளனர்.