செய்திகள் :

திருவாரூர்: மனுநீதிச் சோழன் நினைவு கல்தேர்; தொய்வுடன் நடைபெறும் திருப்பணி - மக்கள் வேதனை

post image
திருவாரூர் மாவட்டம், தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் விட்டவாசல் பகுதியில் அமைந்துள்ளது மனுநீதிச் சோழன் நினைவு கல்தேர்.

மனுநீதிச் சோழன் என்பவர் திருவாரூர் மண்ணை ஆண்ட சோழ மன்னன் ஆவார். இன்னும் நீதி தவறாமை குறித்து பேசும் அறிஞர்கள் பலர் மனுநீதிச் சோழனையே எடுத்துக்காட்டாக கூறுவர். ஏனெனில் பசுவின் கன்று ஒன்று, தன் மகன் ஓட்டி வந்த தேர் சக்கரத்தில் அடிபட்டு இறந்தது. இதற்காக தான் ஈன்றெடுத்த ஒரே மகனையே தேர் சக்கரத்தில் பலியிட்டு நீதி வழங்கினான். இப்பேற்பட்ட மன்னனின் புகழை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது இக்கல் தேர். ஆனால் இதனை நேரில் சென்று பார்த்த போது அதன் நிலை நமக்கு அதிர்ச்சியை தந்தது

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு அவர்களால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இன்றளவும் பணி முடியாத நிலையாய் நீடிக்கிறது என்பது சுற்றுலா பயணிகளையும் அறிஞர்களையும் கவலை கொள்ள வைக்கிறது.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள ராஜா என்பவரிடம் பேசிய போது, "இந்த கல்லுத்தேர் பணி ஆறு மாசமா நடந்துகிட்டு இருக்கு. இந்த ஆறு மாசத்துல கல்லுத்தேர் மண்டபத்தை சரி செஞ்சு கட்டுற மாதிரி டிராமா தான் காட்டுறாங்க, இதைக் கேக்க போனா காய காய கட்டுனா தான் வலுவாய் இருக்கும்'னு சொல்றாங்க. திருவாரூர் மாவட்டத்துக்கு பெருமை தர்ற விஷயங்களில் இந்த கல்லு தேருக்கும் தனிச்சிறப்பு உண்டு.

நீதி தவறாமையை உலகுக்கு எடுத்து சொல்லவே இந்த கல்தேர் அமைக்கப்படது. இத பார்க்க வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்தெல்லாம் வருவாங்க. ஆனா இதோட வெளித்தோற்றத்தை பார்த்து முகம் சுளிச்சுகிட்டு போயிடுறாங்க. கோயிலுக்கு வர்ற பக்தர்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கும் முறையான குடிநீர் வசதியோ கழிப்பறை வசதியோ கிடையாது. மேலும் மாடு நிறைய இந்தக் கல்லுத்தேர சுத்தி நிக்கும். இதனால இதைப் பார்க்க வர்ற சுற்றுலா பயணிகள் பெரிய கஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள். இதை மேம்படுத்த நகராட்சி நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் நல்லதொரு முடிவை எடுக்கணும் " என்று வேதனையுடன் கூறினார்.

சுற்றுலா பயணி ஜம்பு என்பவரிடம் பேசியபோது, "இங்கு எங்கள மாதிரி சுற்றுலா பயணிகளுக்கு முறையான தண்ணீர் வசதி கிடையாது. இந்த கல்தேர் பக்கத்துல ஒரு வாட்டர் டேங்க் இருக்கு. அந்த டேங்க், கிளீன் பண்றது கிடையாது. அப்படி இருந்தும் இதைச் சுற்றியுள்ள ஹவுசிங் போர்டு இதுதான் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. நிறைய மாடுகள் சுத்திக்கிட்டு இருக்கு இது எங்களுக்கு அச்சுறுத்தலா இருக்கு” என்றார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையரை நேரில் சந்திக்க மூன்று நாள்களாக முயற்சித்து முடியவில்லை...!

இது தொடர்பாக திருவாரூர் நகராட்சி பொது சுகாதார ஆய்வாளர் அவர்களிடம் நேரில் சென்று கேட்டபோது, "பத்து நாட்களுக்கு ஒரு முறை சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து பெரிய மாட்டிற்கு ஆயிரம் அபராதமும் கன்றுகளுக்கு 500 அபராதமும் விதித்து கால்நடை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது" என்றார்.

குடிநீர் தொடர்பாக திருவாரூர் நகராட்சி இன்ஜினியரிங் கிளர்க் (பொறியியல் எழுத்தர்) அவர்களிடம் கேட்டோம். ஆனால் அவர் நமக்கு சரியான விளக்கம் தரவில்லை!

இக்கல்தேர் பணி குறித்து தியாகராஜ திருக்கோயில் செயல் அலுவலர் ரா. அழகிய மணவாளன் அவர்களிடம் கேட்டபோது "இந்த கல்தேர் பணி 49 லட்சம் நிதியில் கடந்த ஒரு மாத காலமாக செயல்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதத்தில் வேலை துரிதப்படுத்தப்பட்டு முடிவுறும்" என்றார்.

திருவாரூர் நகராட்சி நிர்வாகமும் திருக்கோயில் நிர்வாகமும் விரைந்து கல்தேர் பணிகளைகளை முடிக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

Britney Spears: "நான் வாழ்வில் செய்த சிறந்த காரியம்.." - தன்னைத்தானே திருமணம் செய்த பாடகி ஸ்பியர்ஸ்

அமெரிக்காவின் பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். சிறுவயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கிய ஸ்பியர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார். இதற்கிடையில் ஈரானிய-அமெரிக்க... மேலும் பார்க்க

Stammering Day: `பேச்சுக்கு எல்லை ஏது?' – ரேடியோ மிர்ச்சியின் ஒரு துணிச்சலான செயல்

புதுமையான யோசனைகளுக்கு பெயர் பெற்ற ரேடியோ மிர்ச்சி, அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் மற்றொரு தைரியமான முயற்சியுடன் மீண்டும் வந்துள்ளது.இந்த நேரத்தில், அவர்கள் ரேடியோ ஜாக்கிகளாக (RJs) பேச்சு குறை... மேலும் பார்க்க

சல்மான்கானை குறிவைக்கும் கேங் - பிளாக்பக் மான்களுக்கும் பிஷ்னோய் இனத்துக்குமான 5 நூற்றாண்டு தொடர்பு!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் 1998-ம் ஆண்டு `ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக சென்ற போது ஜெய்ப்பூர் அருகே இரண்டு அபூர்வ வகை பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு... மேலும் பார்க்க

Bishnoi : சல்`மான்' சர்ச்சையால் பேசுபொருளான `வன' பாதுகாவலர்கள்! - யார் இந்த பிஷ்னோய் இன மக்கள்?

லாரன்ஸ் பிஷ்னோய் இன்றைக்கு இந்தியா முழுவதும் அறியப்படும் ஒரு மாஃபியாவாக வளர்ந்து நிற்கிறார். இந்த அளவுக்கு அறியப்படுவதற்கு காரணம் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததுதான். சல்மான... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: தமிழ்த்தாய் வாழ்த்து `டு' ஹமாஸ் தலைவர் கொலை... கேள்விகளுக்கு பதிலளிக்க ரெடியா?

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து படும்போது குறிப்பிட்ட வரி மட்டும் பாடாமல் விட்டது, பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மாணவர் புகார் மனு அளித்தது, உச்ச நீதிமன்றதி... மேலும் பார்க்க

Tamannaah Bhatia : பிட்காயின் மோசடி; நடிகை தமன்னாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை!

தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா பாட்டியா பிட்காய்ன் மோசடியில் தொடர்புடைய மொபைல் செயலியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. HPZ Token என்ற அந்த மொபைல் செயல... மேலும் பார்க்க