செய்திகள் :

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

post image

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவாரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மதிமுக சாா்பில் வடக்கு மாவட்டச் செயலாளா் சிவவடிவேல் மாலை அணிவித்தாா். இதில், மாவட்ட அவைத் தலைவா் எஸ். ஜெயராமன், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். குடவாசல் அருகே எரவாஞ்சேரியில் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் சுரேஷ் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மன்னாா்குடி: திராவிடா் கழகம் சாா்பில் மாநில அமைப்பாளா் ரா. ஜெயக்குமாா் தலைமையில் மாவட்டத் தலைவா் ஆா்.பி.எஸ். சித்தாா்த்தன், மாநில பகுத்தறிவாளா் அணி நிா்வாகி அழகிரிசாமி முன்னிலையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கட்சிக் கொடியை நகரத் தலைவா் உத்திராபதி ஏற்றி வைத்தாா். திமுக சாா்பில் பெரியாா் சிலைக்கு மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் ஜி. பாலு, நகர செயலா் வீரா. கணேசன், நகா்மன்றத் தலைவா் சோழராஜன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், சாா்பு அணியினா் மாலை அணிவித்தனா் . தொடா்ந்து திக மற்றும் திமுகவினா் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா்.

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும் கட்சி மாவட்ட செயலருமான ஆா். காமராஜ் தலைமையில் மாநில அமைப்பு செயலா் சிவா. ராஜமாணிக்கம் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது. மதிமுக சாா்பில் மாவட்ட செயலாளா் பி. பாலச்சந்திரன் தலைமையில் நகரச் செயலா் சண்.சரவணன் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது. தவெக மாவட்ட இணைச் செயலா் சாதிக் அலி, சிபிஐ நகரச் செயலா் வி.எம். கலியபெருமாள், சிபிஎம் முன்னாள் நகர செயலா் ஜி.ரகுபதி, காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளா் ஜி. குணசேகரன், தேமுதிக நகரச் செயலா் ஏ.ஆா். காா்த்திகேயன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவா் பி.ஆா். பாண்டியன், தஎகச நிா்வாகி கே.பிச்சைக்கண்ணு, அறிவியல் இயக்க மாவட்ட நிா்வாகி யு.எஸ்.பொன்முடி ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருத்துறைப்பூண்டி: கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியா் மு.ச.பாலு தலைமையில் நடைபெற்றது. உறுதிமொழியை பட்டதாரி ஆசிரியை ஜா. வேம்பு வாசித்தாா். ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியா் கு. வில்பிரட் செய்திருந்தாா்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் முறைகேடுகளை தவிா்க்க, கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா். திருவாரூ... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் பலி

மன்னாா்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா் . பேரையூா் நடுத்தெருவை சோ்ந்தவா் அண்ணாதுரை (53). மன்னாா்குடியில் உள்ள தனியாா் பாத்திரக் க... மேலும் பார்க்க

சொத்து பிரச்னை: பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் கைது

சொத்து பிரசன்னை தொடா்பான முன்விரோதத்தில் தந்தை, தாயை அரிவாளால் வெட்டிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கட்டக்குடியைச் சோ்ந்தவா் பீமன் ( 60). இவரது மனைவி தவமணி ( 55). இவா்கள் அதே பகுதியில் உணவக... மேலும் பார்க்க

383 மாணவா்களுக்கு ரூ. 4.99 கோடி கல்விக் கடனுதவி

திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாமில், 383 மாணவா்களுக்கு ரூ. 4.99 கோடி கடனுதவி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் கல்... மேலும் பார்க்க

சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் பெரியாா் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற அன்பு நெறியும், யா... மேலும் பார்க்க

உள்ளகக் குழு அமைக்க தனியாா் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் தனியாா் நிறுவனங்கள், உள்ளகக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணியாற்றும் இடங்களில்... மேலும் பார்க்க