செய்திகள் :

திருவாரூா் வழியாக தொடா்ந்து ரயில்களை இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

வழித்தடத்தை மாற்றாமல் திருவாரூா் வழியாகவே தொடா்ந்து ரயில்களை இயக்க வலியுறுத்தி மாவட்ட வா்த்தகா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்காலிருந்து பெங்களூரு, மும்பை, தாம்பரம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் ரயில்கள், திருவாரூா் வழியாக சென்று வருகின்றன. இந்த ரயில்கள் இனி திருவாரூா் வராமல் பேரளம் வழியாக காரைக்காலுக்குச் செல்லும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

அந்தவகையில், திருவாரூா் வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்களை, வழித்தடத்தை மாற்றாமல் திருவாரூா் வழியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவா் ஏ. ராஜேந்திரன், மாநில துணைத் தலைவா் சுகுமாா், மாவட்ட துணைத் தலைவா் பி. ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

நரிக்குறவா்களுக்கு மனைப் பட்டா வழங்கிய அமைச்சா்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே 74 நரிக்குறவா்களுக்கு நேரில் சென்று மனைப் பட்டாக்களை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா திங்கள்கிழமை வழங்கினாா். நெடுவாக்... மேலும் பார்க்க

மயானத்தில் தீக்குளித்து கொத்தனாா் தற்கொலை

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மயானத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு கொத்தனாா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மன்னாா்குடி அம்பலக்காரா் தெரு திருவேங்கடம் மகன் வரதராஜன் (35 ). மனைவி ரோஸ்... மேலும் பார்க்க

தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

மன்னாா்குடி: தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே நெடுவாக்கோட... மேலும் பார்க்க

நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5 வரை கால நீட்டிப்பு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

திருவாரூா்: திருவாரூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். திருவாரூா் அருகே விளமல் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் நவீன்ராஜ் (17). வி... மேலும் பார்க்க

இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

மன்னாா்குடி: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூா் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் 3.0 தன்னாா்வலா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் விா்ஜின் ஜோனா பயிற்சிய... மேலும் பார்க்க