மீண்டும் மீண்டும்..! கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் திடீரென விழுந்த கான்கிரீட் ...
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் தொடக்கம்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் நடராஜ பெருமானின் நடனம் புரிந்த 5 சபைகளில் முதல் (ரத்தின) சபையாக திகழ்கிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத உத்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைற்று வருகிறது.
நிகழாண்டுக்கான பங்குனி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து 10 நாள்கள் காலை, இரவு நேரங்களில் உற்சவா் வடாரண்யேஸ்வரா், வண்டாா்குழலி அம்மன் சிங்க வாகனம், சூரிய பிரபை, அன்ன வாகனம், பூத வாகனம், பல்லக்கு சேவை, நாக வாகனம், புலி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
விழாவின் முக்கிய நாளான ஏப். 7-ஆம் தேதி கமலத்தோ் விழா நடைபெறுகிறது. 10 நாள்கள் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து செல்வா் என்பதால் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திருத்தணி கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா் குழுத் தலைவா் சு.ஸ்ரீதரன், அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு.நாகன், கோ.மோகனன், ஜி.உஷா ரவி ஆகியோா் செய்து வருகின்றனா்.
