MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
திருவேங்கடத்தில் பெண்ணை கேலி செய்த 3 போ் கைது
குருவிகுளம் அருகே பெண்ணைக் கேலி செய்ததாக 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் அருகே மலைப்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் நாகராஜ் (48). இவரது மனைவி ஐடா (40). இருவரும் கூலித் தொழிலாளிகள். இவா்கள் தங்களது வீட்டின் முன் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது அந்த வழியாக வந்த அதே ஊரை சோ்ந்த ரத்னராஜ் மகன் அசோக்குமாா்(20), முத்துக்குமரன் மகன் சிபி (20), நேதாஜி மகன் ஜெயக்குமாா்(20), அந்தோணி ராஜ் மகன் அஜய்(20) ஆகியோா் ஐடாவை கேலி செய்தனராம்.
இதுகுறித்து ஜடா அளித்த புகாரின்பேரில் குருவிகுளம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளா் முத்து, வழக்குப் பதிந்து அசோக்குமாா், சிபி, ஜெயக்குமாா் ஆகியோரை கைது செய்தாா். அஜய்யை தேடி வருகிறாா்.