பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்
திரையரங்க உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சப்தம் பட இயக்குநர்!
சப்தம் பட இயக்குநர் அறிவழகன் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒலியமைப்பை நன்றாக வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிமுக படத்தின் நாயகனான ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.
ஆல்பா பிரேம்ஸ் சார்பில் 7ஜி பிலிம்ஸ் சிவா இந்தப் படத்தை தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஈரம் படத்தைப் போன்று ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இன்று திரையரங்கில் வெளியாகும் இந்தப் படம் குறித்து இயக்குநர் அறிவழகன் கூறியதாவது:
மதிப்பிற்குரிய அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வணக்கம், வெள்ளிக்கிழமை (பிப்.28) 7ஜி பிலிம்ஸ் தயாரிப்பில், ஆதி நடித்து, எனது இயக்கத்தில் 'சப்தம்' என்னும் திரைப்படம் வெளியாக இருப்பதை அனைவரும் அறிவோம்.
சப்தம் திரைப்படத்தின் கதை சப்தத்தை மையமாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு ஆவி திரில்லர் படம் என்பதால் இசை, ஒலியமைப்பு அனைத்தும் ஒரே சமயத்தில் பார்ப்பவர்களுக்கு அசௌகரியத்தை கொடுக்காது அதன் துல்லியத்தை உணரும் வகையிலும், திகிலை உணர்த்தும் வகையிலும் டால்பி அட்மோஸ், 7.1 , 5. 1 முறையில் தனித்தனியே திரையரங்குகளுக்கு தகுந்தது போல் அமைக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் திரைப்படம் அனுபவம் என்பது பெரிய திரையில், நவீன ஒளி, ஒலி தொழில் நுட்பத்துடன் பார்க்கும் போதுதான் ஒரு முழுமையான திரையரங்க அனுபவம் கிடைக்கின்றது.
எனவே, திரையிடுவதற்கு முன்பே ஒலி பெருக்கி, ஒலியமைப்பு கருவிகளை அளவு திருத்தி (Calibrate) செய்து இந்தப் படத்திற்கென ஒலி அளவினை 6 முதல் 6.5 என்று திரையரங்கு அளவு, அமைப்புக்கு ஏற்றவாறு வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
சப்தம் திரைப்படத்தின் அனுபவத்தினை மக்கள் முழுமையாய் உணரும் பொருட்டு உங்கள் ஒத்துழைப்பினை தாழ்மையுடன் எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்,
அறிவழகன் திரைப்பட இயக்குநர்.