ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
திறந்த 3 நாளில் சரிந்து விழுந்த பயணியா் நிழற்கூட மேற்கூரை
குடியாத்தம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்ட பேருந்து பயணியா் நிழற்கூட மேற்கூரை சரிந்து விழுந்தது.
குடியாத்தம்- பலமநோ் சாலையில் கள்ளூா் அருகே ரூ.11- லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டபேருந்து பயணியா் நிழற்கூடத்தை வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிழற்கூடத்தின் மேற்கூரை, மின்விசிறியுடன் சரிந்து விழுந்தது. அப்போது நிழற்கூடத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. உடனடியாக கட்டடத் தொழிலாளா்கள் வரவழைக்கப்பட்டு, மேற்கூரையை சீரமைக்கும் பணி நடைபெற்றது.