செய்திகள் :

தில்லியில் தேவேந்திர ஃபட்னவீஸ்! ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை?

post image

மகாராஷ்டிர தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்முறையாக தில்லி சென்றுள்ளார் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.

இந்தப் பயணத்தில், தில்லி பாஜக தலைமையிடத்தில் மூத்த தலைவர்களை சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஃபட்னவீஸ் ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக் காலம் நாளையுடன் (நவ. 26) நிறைவடையவுள்ள நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக மகாயுதி கூட்டணியில் பேச்சுவார்த்தை நீண்டு வருகிறது.

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதில் பாஜக 132, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளில் வென்றன.

அதானியை கைதுசெய்ய கோரி இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

புது தில்லி: இந்தியாவின் நான்கு மாநிலங்களில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டாலா்கள் லஞ்சம் வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபா் கெளதம்... மேலும் பார்க்க

பாஜக அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில்லை: திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு

புது தில்லி: மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில்லை என்றும் மிக முக்கியப் பிரச்னைகளுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க மறுக்கிறாா்கள் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா எம்... மேலும் பார்க்க

ஆராய்ச்சி படிப்புகளுக்காக ரூ.6,000 கோடியில் புதிய திட்டம் -மத்திய அரசு ஒப்புதல்

ஆராய்ச்சி படிப்புகள் தொடர்பான ஆய்விதழ்கள், கட்டுரைகளை உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எளிதில் படித்து பயன்பெறுவதற்காக ‘ஒரே நாடு, ஒரே சப்ஸ்கிரிப்சன்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ரூ... மேலும் பார்க்க

உ.பி.யில் முஸ்லிம் இளைஞரிடம் அட்டூழியம்: ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தல்!

மீரட்: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவரின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மீரட் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் துப்பாக்கிச் சுடுதல் பயிற்... மேலும் பார்க்க

மணிப்பூரில் மேலும் இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூரில் மேலும் இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக மணிப்பூரில் 9 மாவட்டங்களில் வரும் 27 ஆம் தேதி வரை இணைய சேவை துண்டிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

தில்லி: மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் விரைவில் திறப்பு? உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

புதுதில்லியில் காற்று மாசு அதிகரித்து காணப்படுவதால், மாணவர்களின் உடல்நலனைக் கருத்திற்கொண்டு, 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களும் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கடந்த வாரம் தில்... மேலும் பார்க்க