செய்திகள் :

தில்லியில் பழைய வாகனங்களுக்கான எரிபொருள் தடை: கடும் எதிர்ப்பால் தளர்வுகள்!

post image

தில்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது என்ற நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், தளர்வுகளை கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றன.

தில்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசுபாட்டால் பலரும் பாதிப்படைந்துள்ளனர். இதனால், அதிகளவில் மாசுபாட்டை ஏற்படுத்தக் கூடிய 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கத் தடைவிதிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களும் தில்லியில் உள்ள எந்த எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்படாது என கடுமையான நடைமுறை அமல்படுத்தப்பட்டது. மேலும், எரிபொருள் நிரப்பவரும் பழைய வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதலும் செய்யப்பட்டன. இதனால், பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், பல்வேறு சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக இந்த வாகனங்களுக்கு உடனடியாகத் தடைவிதிக்க முடியாது என தில்லி அரசு காற்று தர மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, “இந்த நடவடிக்கையால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் அவர்களுடன் நிற்கிறது” என்றும் தெரிவித்தார்.

தில்லியில் சுமார் 60.14 லட்சம் பதிவு நீக்கம் செய்யப்பட்ட 10 முதல் 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் உள்ளன. அவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. தில்லியில் 41 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 18 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 62 லட்சத்திற்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் இருப்பதாகவும் வாகன் தரவுத்தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

The Delhi government has written to the Commission for Air Quality Management, saying the fuel ban on overage vehicles is not feasible due to technological challenges and complex systems.

இதையும் படிக்க...பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை

சென்னை அடுத்த திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநின்றவூரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி கோமதி 26 ஆவது வார்டு கவுன்சிலர... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியில் இருந்து 19,286 கன அடியாக அதிகரித்தது.காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அ... மேலும் பார்க்க

இந்தியாவில் ஆசிய, ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு அனுமதி?!

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை மற்றும் ஜூனியர் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை மற்றும் ஜ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் விநாயகர் கோயிலை இடிக்க முயற்சி: மக்கள் முற்றுகை போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் வியாழக்கிழமை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள உள்ளூர்... மேலும் பார்க்க

பாமக எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்... மேலும் பார்க்க

விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்

ரியல் எஸ்டேட் என்ற பெயரில், விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டிருப்பது ஆபத்தான போக்கு. அது எந்நாளும் ஏற்புக்குரியது அல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவ... மேலும் பார்க்க