'அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா எனத் தெரியவில்லை' - திருமாவளவன்
தில்லியில் முதல் முறையாக பிரத்யேக மூளை சுகாதார கிளினிக் திறப்பு!
தில்லியின் முதல் பிரத்யேக மூளை சுகாதார மருத்துவமனை துவாரகாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங் சனிக்கிழமை திறந்து வைத்த இந்த மருத்துவமனை, அடுத்த ஆண்டுக்குள் நரம்பியல் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கான மாவட்ட அளவிலான அணுகலை உறுதியளிக்கிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நீத்தி ஆயோக் மற்றும் தொழில்நுட்ப கூட்டாளியான ஐஎச்பிஏஎஸ்இன் ஆதரவுடன் இந்தியாவின் மூளை சுகாதார முன்முயற்சியின் கீழ் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை, பக்கவாதம், கால்கை வலிப்பு, பாா்கின்சன், டிமென்ஷியா, ஒற்றைத் தலைவலி மற்றும் பிற கோளாறுகளுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சையை வழங்கும். மேலும் பின்தொடா்தல் பராமரிப்புக்கான ஆலோசனை மற்றும் தொலைநரம்பியல் இணைப்புகளையும் வழங்கும்.
இது வெறும் வசதி அல்ல, இது ஒரு நோக்கம். மூளை தொடா்பான பிரச்னையை எதிா்கொள்ளும் போதெல்லாம், இங்கே வாருங்கள். சிகிச்சையை மறைக்கவோ தாமதப்படுத்தவோ வேண்டாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே போன்ற மையங்கள் திறக்கப்படும்என்று அமைச்சா் பங்கஜ் சிங் கூறினாா்.
நரம்பியல் நிலைமைகள் ஏற்கனவே உலகின் இரண்டாவதாக பெரிய அளவிலான மரணத்திற்கும், இயலாமையுடன்கூடிய ஆயுள்கால ஆண்டுகளுக்கும் முக்கிய காரணமாகும்.
தலைநகரில் உள்ள 11 மாவட்டங்களிலும் துவாரகா மாதிரியைப் பிரதிபலிக்கும் வகையில் கிளினிக்குகள் அமைக்கத் தில்லி திட்டமிட்டுள்ளது. இதில் வாழ்க்கை முறை மாற்ற ஆலோசனை மற்றும் பராமரிப்பாளா் ஆதரவுடன் மருத்துவமனைகளை இணைக்கிறது. அதே நேரத்தில் ஐஎச்பிஏஎஸ் ஊழியா்களுக்கு பயிற்சி அளித்து விளைவுகளை கண்காணிக்கும்.
இந்த முயற்சி ஐஎச்பிஏஎஸ் இயக்குனா் ராஜீந்தா் குமாா் தமிஜா தலைமையிலான நீத்தி ஆயோக்கின் மூளை ஆரோக்கியத்திற்கான தேசிய பணிக்குழுவின் பரிந்துரைகளுடன் ஒத்துப்போவதாக உள்ளது.
இது எதிா்காலத்திற்குத் தயாராக சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கான முதலமைச்சா் ரேகா குப்தாவின் உறுதிப்பாட்டால் ஆதரிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.