செய்திகள் :

தில்லி: ஐசியு, பிணவறை இல்லாத மருத்துவமனைகள்!

post image

தில்லியில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் இல்லாமல் மருத்துவமனைகள் இயங்குவதாக சிஏஜி தகவல் வெளியிட்டுள்ளது.

மொஹல்லா கிளினிக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

அதன்படி, தில்லி பேரவையில் இன்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுகாதாரத் துறையில் போதிய பணியாளர்கள் இன்மை, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை, மொஹல்லா கிளினிக்குகளில் மோசமான உள்கட்டமைப்பு, நிதி மேலாண்மையில் அலட்சியம் ஆகியவை உள்ளதாகவும் இந்த அறிக்கையில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தில்லியின் சுகாதார உள்கட்டமைப்பு குறித்த சிஏஜி அறிக்கையில், கடந்த 6 ஆண்டுகளில் கடுமையான நிதி முறைகேடு, அலட்சியம், பொறுப்புணர்வு இல்லாமை ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளது.

சிஏஜி வெளியிட்டுள்ள முக்கிய தரவுகள்

  • தில்லியில் உள்ள பல மருத்துவமனைகளில் மருத்துவசேவைகள் இல்லை. நகரத்தில் மொத்தமுள்ள 27 மருத்துவமனைகளில் 14 மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் 16 மருத்துவமனைகளில் ரத்தவங்கிகளும் இல்லை.

  • அதுமட்டுமின்றி 8 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வினியோகமும், 15 மருத்துவமனைகளில் பிணவறைகளும் இல்லை. மேலும், 12 மருத்துவமனைகள் அவசர ஊர்திகள் இல்லாமல் இயங்கி வருகின்றன.

  • பல மொஹல்லா மருத்துவமனைகளில் கழிப்பறைகள், ஜெனரேட்டர் வசதிகள் மற்றும் பரிசோதனை மேசைகள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லை. ஆயுஷ் மருந்தகங்களிலும் இது போன்ற குறைபாடுகள் உள்ளன.

  • செவிலியர்கள் பற்றாக்குறையும் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. 21 சதவிகிதம் செவிலியர்கள் பற்றாக்குறையும், 38 சதவிகிதம் துணைநிலை மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையும் சில மருத்துமனைகளில் 50-98 சதவிகிதம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறது.

  • ராஜீவ் காந்தி மற்றும் ஜனக்புரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை பிரிவுகள், படுக்கைகள் மற்றும் தனியார் அறைகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அதே நேரத்தில் அவசரச் சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவர்கள் இல்லை.

  • கரோனா மீட்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ.787.91 கோடியில் ரூ.582.84 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.30.52 கோடி செலவிடப்படாமல் இருக்கிறது. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிபிஇ கருவிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.83.14 கோடியும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.

  • 32,000 புதிய மருத்துவமனை படுக்கைகளில், 1,357 (4.24 சதவீதம்) மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் தரையில் படுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

  • லோக் நாயக் மருத்துவமனையில் நோயாளிகள் பொது அறுவைச் சிகிச்சைகளுக்கு 2-3 மாதங்களும், தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைகளுக்கு 6-8 மாதங்களும் காத்திருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.: சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

உ.பி.யின் ஜான்பூரில் சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் நகர் கோட்வாலி பகுதியில் வாய்க்காலில் வீசப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸ்... மேலும் பார்க்க

ஐடி ஊழியர் தற்கொலை: நேரலையில் மனைவி மீது குற்றச்சாட்டு!

மனைவி ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி நேரலையில் பதிவு செய்து ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். உ.பி. மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள டிஃபன்ஸ் காலனியில் வசிப்பவர் மானவ்... மேலும் பார்க்க

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? கட்சிக்குள் தொடரும் குழப்பம்!

பாஜகவின் தேசியத் தலைவரை நியமிக்கும் பணியில் மேலும் தொய்வு ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகிக்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டில் பாஜகவின்... மேலும் பார்க்க

கோவா வரும் சுற்றுலா பயணிகள் குறைந்ததற்கு இட்லி, சாம்பார் தான் காரணம்!

நமது நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக் குறைந்ததற்கு இட்லி, சாம்பார், வடா பாவ் மற்றும் உக்ரைன் போர்தான் காரணம் என்று பாஜக எம்எல்ஏ கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் சூப்பாக்கிச் சூடு; யாருக்கும் காயம் இல்லை

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மைதேயி மத வழிபாட்டு தலம் அருகிலுள்ள மலைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மைதேயின் புனிதத் தலமான கோங்பா மருவுக்கு பக... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பலில் உள்ள ஜாமா மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்... மேலும் பார்க்க