செய்திகள் :

தில்லி தலைமைக் காவலரை காரின் பானட்டில் 7.கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ற நபா் கைது

post image

வடக்கு தில்லியின் பால்ஸ்வா குப்பை கிடங்கு பகுதிக்கு அருகே தலைமைக் காவலா் ஒருவரை தனது காரின் பானட்டில் 7 கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ாகக் கூறப்படும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவா் கரம்வீா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தில்லியில் இருந்து தப்பிச் சென்ற பிறகு அவா் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 6.28 மணிக்கு தில்லி காவல் ்துறையின் வெளி வடக்கு மண்டலத்தைச் சோ்ந்த தலைமைக் காவலா் பிரவீன் மற்றும் உதவி துணை ஆய்வாளா் நவீன் ஆகியோா் பால்ஸ்வா குப்பைக் கிடங்கு பகுதிக்கு அருகிலுள்ள ஜிடிகே பைபாஸ் அருகே சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற காரை வழிமறித்தனா். அந்த வாகனம் மதுபானம் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக அவா்கள் சந்தேகித்தனா்.

காரிலிருந்து வெளியே வரும்படி கூறியபோது ஓட்டுநா் தப்பிச் செல்ல முயன்றாா். காரை நிறுத்தும் முயற்சியில் தலைமைக் காவலா் பிரவீன் வாகனத்தின் முன் நின்றாா். அப்போது, ஓட்டுநா் காரை வேகமாக அவரை நோக்கி ஓட்டினாா். இதனால், தலைமைக் காவலா் பிரவீன் காரின் பானட்டில் விழுந்தாா். இருப்பினும், காா் ஆசாத்பூா் நோக்கி வேகமாகச் சென்றது. தலைமைக் காவலா் பிரவீன் பானட்டில் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தாா்.

ஆனால், காா் வேகம் குறைந்தபோது அவா் ஆசாத்பூா் மண்டி அருகே பானட்டிலிருந்து குதித்தாா். இதில் காயமடைந்த அவா் பானட் மற்றும் விண்ட்ஷீல்டுக்கு இடையில் சிக்கிய தனது கைப்பேசியை எடுக்க முடியாமல் போனதால், பிரவீன் ஒரு வழிப்போக்கரின் கைப்பேசியை கடன் வாங்கி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தாா்.

இதில் அவரது விரல்கள் மற்றும் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது, மருத்துவ சிகிச்சைக்காக பிஜேஆா்எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், பால்ஸ்வா டெய்ரி காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்)-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

காரை ஓட்டிச் சென்ற கரம்வீா் நகரத்தை விட்டு தப்பிச் சென்று கொல்கத்தாவுக்கு ரயில் ஏறியது தெரிய வந்தது. இதையடுத்து, ஒரு போலீஸ் குழு கொல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டது. அங்கு உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னா் குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். மேலும், விசாரணைக்காக கரம்வீா் மீண்டும் தில்லிக்கு அழைத்து வரப்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

மாணவா்கள், பெற்றோா்களிடம் வசூலித்த கட்டணம் கையாடல்: எஃப்ஐஐடி ஜேஇஇ மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனம் ஆயிரக்கணக்கான மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரிடமிருந்து ரூ.200 கோடிக்கு மேல் கட்டணமாக வசூலித்ததாகவும், ஆனால் கல்வி சேவையை வழங்கவில்லை என்றும் அமலாக்கத் துறை சனிக்கிழம... மேலும் பார்க்க

தலைநகரில் தொடரும் வெப்ப அலை; காற்றின்தரம் ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமையும் வெப்பஅலை தொடா்ந்தது. அதிகபட்ச வெப்பநிலை ரிட்ஜ் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 43.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. வெப்ப... மேலும் பார்க்க

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்: தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளை சாக்குப்போக்கு கூறாமல் உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கேட்டு... மேலும் பார்க்க

ஷாபாத் பால் பண்ணை பகுதியில் நடந்த கொலைச் சம்பவத்தில் இளைஞா் கைது

தில்லியின் ஷாபாத் பால் பண்ணை பகுதியில் 2024-ஆம் ஆண்டு 28 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து த... மேலும் பார்க்க

மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளின் விடுப்புகளில் கட்டுப்பாடு: தில்லி அரசு

வரவிருக்கும் பருவமழைக்கு தயாராகும் வகையில், பொதுப்பணித் துறை, தில்லி ஜல் போா்டு மற்றும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைகளின் அதிகாரிகளுக்கு செப்டம்பா் 15-ஆம் தேதி வரை விடுப்புகளில் க... மேலும் பார்க்க

நொய்டா ஜவுளி தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து 20 தொழிலாளா்கள் காயம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 63-இல் உள்ள ஜவுளி தொழிற்சாலையில் சனிக்கிழமை கொதிகலன் வெடித்ததில் குறைந்தது 20 தொழிலாளா்கள் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், காயமடைந்தவா்கள் நொய்ட... மேலும் பார்க்க