செய்திகள் :

தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!

post image

தில்லி பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர்.

தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 19.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தில்லி வடகிழக்கு மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8 என்று எண்ணப்பட உள்ளன.

இதையும் படிக்க | காலை 11 மணி நிலவரம்: ஈரோடு கிழக்கில் 26.03% வாக்குப்பதிவு!

தில்லி பேரவைத் தேர்தலில் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.

தில்லி அரசு அலுவலகமான நிர்மன் பவனில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது வாக்கினைச் செலுத்தினார். அவரது மகளும் காங்கிரஸ் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, புதுதில்லி காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீக்ஷித் ஆகியோர் அவருடன் சென்றனர்.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் தங்கள் வாக்கினைச் செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பிரியங்கா காந்தி,

'வீடுகளில் இருந்து வெளியே வந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நமது அரசியலமைப்பு நமக்கு மிக முக்கியமான உரிமையை வழங்கியுள்ளது. எனவே அதை நாம் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். தில்லி மக்கள் சோர்வடைந்துவிட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கு சென்றாலும், தண்ணீர், காற்று, சாலைகள் சரியில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். இதுபோன்று பல பிரச்னைகள் உள்ளன. அவற்றையெல்லாம் சரிசெய்ய விரும்பினால், அனைவரும் வாக்களியுங்கள்' என்று பேசினார்.

தேர்தலில் பாஜகவுக்காக போலி வாக்களிக்கும் அதிகாரிகள்! அகிலேஷ் வெளியிட்ட ஆதாரம்

உத்தரப் பிரதேச மாநிலம் மில்கிபூர் இடைத்தேர்தலில் ஆளும் பாஜவுக்காக இலக்கு நிர்ணயித்து போலி வாக்களிப்பதாக தேர்தல் அதிகாரிகள் மீது சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பார்க்க

உணவு டெலிவரி போல இனி கார் டெலிவரி! விரைவில் அறிமுகம்

இன்றைய நவீன காலத்தில் எதுவும் சாத்தியமே என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் விதமாக, வீட்டிலிருந்தவாறே உணவுப் பொருள்களை ஆர்டர் செய்து அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறையைப் பின்பற்றி இனிமேல் புதிய கார் வாங... மேலும் பார்க்க

விமான நிலையக் காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!

மேற்கு வங்கத்தில் விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் வ... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு அநீதி இழைக்கும் அமெரிக்கா; பிரதமர் மோடி மௌனம்! காங்கிரஸ் குற்றச்சாடு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், நாடு கடத்... மேலும் பார்க்க

ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

அலுவலக சாதனங்களில் செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அல... மேலும் பார்க்க

அமெரிக்காவிலிருந்து 104 இந்தியர்களுடன் அமிர்தசரஸ் வந்த ராணுவ விமானம்

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர்.அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ராணுவ விமானம் இன... மேலும் பார்க்க