4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!
தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
தில்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி நிர்வாகியுமான சௌரவ் பரத்வாஜுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மருத்துவமனை கட்டுமானத் திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டின் கீழ், ஆம் ஆத்மி அரசின் சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த சௌரவ் பரத்வாஜ் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
குற்றச்சாட்டு என்ன?
கடந்த 2018 - 19 காலகட்டத்தில் ரூ.5,590 கோடி மதிப்புள்ள 24 மருத்துவமனைத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதில் ஆம் ஆத்மி அரசு முறைகேடு செய்ததாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா 2024 ஆம் ஆண்டு புகார் அளித்தார்.
மேலும், சரியான நேரத்தில் மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் முடிக்காததால், பல நூறு கோடி கூடுதல் செலவுகள் ஆனதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.