தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!
திவால் வழக்கில் நீதிபதி விலகல்: ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடுமாறு அழுத்தம் வந்ததாகப் புகார்!
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வைச் சேர்ந்த நீதிபதி சரத் குமார் ஷர்மா, ஒரு திவால் வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளார்.
ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடக்கோரி, நீதித்துறையின் மிக மூத்த உறுப்பினரிடமிருந்த வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட பெருநிறுவன திவால்நிலை தீர்வு செயல்முறை கோரிய வழக்கிலிருந்துதான் நீதிபதி விலகியிருக்கிறார்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி, வெளியில் இருந்து இந்த வழக்கில் ஒரு தரப்புக்கு சாதகமாக தீர்ப்பளிக்குமாறு அழுத்தம் வந்ததால், வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி ஷர்மா தெரிவித்திருக்கிறார்.