செய்திகள் :

தி பாரடைஸ் படப்பிடிப்பில் இணைந்த நானி!

post image

தி பாரடைஸ் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் நானி இணைந்துள்ளார்.

நடிகர் நானி தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாகவே வியாபார ரீதியாகவும் பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார்.

இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான சரிபோத சனிவாரம், ஹிட் - 3 ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக ரூ. 100 கோடியைக் கடந்தன. இதனால், நானி நடிக்கும் படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகின்றன.

அடுத்ததாக, நானி இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படம் ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

படத்தின் கிளிம்ஸ் விடியோவும் அதில் இடம்பெற்ற அனிருத்தின் பின்னணி இசையும் இந்தியளவில் கவனிக்கப்பட்ட நிலையில், தி பாரடைஸ் படப்பிடிப்பில் நானி இணைந்துள்ளதைப் படக்குழு அறிவித்துள்ளது.

நானி

அடுத்த 40 நாள்கள் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர். ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக கரடு முரடான பின்னணியில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: சீஷெல்ஸில் ஒரு காதல்... வைரலான சூர்யா - ஜோதிகா விடியோ!

actor nani joins the paradise

சிம்பு - வெற்றி மாறன் படத்தின் அறிவிப்பு விடியோ எப்போது?

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் அறிவிப்பு விடியோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்... மேலும் பார்க்க

கடும் தோல்வியைச் சந்தித்த கண்ணப்பா!

பான் இந்திய நடிகர்கள் நடித்த கண்ணப்பா படம் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது. தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27)... மேலும் பார்க்க

அட்டகத்தி படத்தினை விற்க உதவிய வெற்றி மாறனின் சிரிப்பு!

இயக்குநர் வெற்றி மாறன் அட்டகத்தி படத்தினை விற்க அவரது சிரிப்பு உதவியதாக இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகியது. இந... மேலும் பார்க்க

ஓஹோ எந்தன் பேபி டிரைலர்!

விஷ்ணு விஷாலின் சகோதரர் நாயகனாக நடித்த ஓஹோ எந்தன் பேபி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷ... மேலும் பார்க்க

தக் லைஃப் ஓடிடி தேதி இதுவா?

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவான ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வ... மேலும் பார்க்க