செய்திகள் :

UGC NET: "ஆங்கிலத் தேர்வில் 'சமஸ்கிருதம்'; இலவச மதிப்பெண்கள் வழங்க வேண்டும்" - சு.வெங்கடேசன் காட்டம்

post image

இன்று நடைபெற்ற ஆங்கில இலக்கியத்துக்கான தேசிய தகுதித் தேர்வில் சமஸ்கிருதம் பற்றி அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

இதுகுறித்த அவரது சமூக வலைத்தளப் பதிவில், "மத்திய அரசு நடத்திய ஆங்கில இலக்கியத்திற்கான தேசிய தகுதித் தேர்வில் (UGC NET) (27/6/25), சமஸ்கிருதம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இது கடுமையான கண்டனத்துக்குரிய நடவடிக்கை. இந்த வினாத்தாளை தயாரித்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." எனக் கூறியுள்ளார் அவர்.

முன்னதாக சமூக வலைதளங்களில் பலரும் ஆங்கில இலக்கியத்துக்கான நெட் தேர்வில், முக்கிய ஆங்கில எழுத்தாளர்களை விட கலாசார விமர்சகர்கள் தொடர்பான கேள்விகளே அதிகம் இருந்ததாகவும், வினாத்தாள் ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்காக தயாரிக்கப்பட்டது போலத் தெரியவில்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.

சமஸ்கிருதம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கான முழு மதிப்பெண்களையும் தேர்வர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது பதிவுடன், இந்துத்துவ தத்துவங்கள், ரிக் வேதம் பற்றிய கேள்விகளை புகைப்படமாக இணைத்துள்ளார்.

திருப்பூர்: இன்ஸ்டாகிராம் குழுவால் உருவான போட்டி; சாலையில் பள்ளி மாணவிகள் மோதிக் கொண்ட பின்னணி என்ன?

திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சிப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் சில மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து, சமூக வலைத்தளங்களில... மேலும் பார்க்க

Aviation: ஃப்ளைட்ல வேலை பார்க்கணும்னா பைலட்தான் ஆகணுமா? - விமானத் துறை படிப்புகளின் லிஸ்ட்

இந்தியாவில் விமானங்கள் எப்போதுமே ஈர்ப்புக்குரியவைதான். வானத்தில் விமானத்தை வேடிக்கை பார்ப்பதே ஒரு அலாதி அனுபவம்தான். ஒரு சிலருக்கோ வேடிக்கை பார்ப்பதைத் தாண்டி விமானங்களிலேயே வேலை கிடைத்தால் எப்படி இரு... மேலும் பார்க்க

மேலாண்மை படிப்பிற்கான சான்றிதழ்; வேலை வாய்ப்பு- வொர்க்ஃப்ரீக்ஸின் புதிய ஒப்பந்தம்

சென்னையில் உள்ள வொர்க்ஃப்ரீக்ஸ் பிசினஸ் ஸ்கூல் மலேசியாவில் உள்ள புகழ் பெற்ற சிட்டி யுனிவர்சிட்டியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய அம்சமாக வொர்க்ஃப்ரீக்ஸ் பிசினஸ் ஸ்கூல... மேலும் பார்க்க

`எதிர்கால தலைமுறையின் அழிவுக்கு பங்களிக்கிறது' - பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தாலிபன்கள் தடை

தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தாலிபன்கள் விதித்த தடை புதன்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் இரண்டாம் ப... மேலும் பார்க்க