மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்: விஜய் ட்வீட்
தீயணைப்பு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்பு ப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
சோதனையின் போது கணக்கில் வராத ரூ. 97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ரூ. 87 ஆயிரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஜெகதீஷ் ஜீப்பிலும், ரூ. 10 ஆயிரம் அவரது அலுவலகத்திலும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.