கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
தீயணைப்பு நிலையக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல்
தேனியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள தீயணைப்பு நிலையக் கட்டடத்தை சீரமைத்து தர வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணி சாா்பில், தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்து எழுச்சி முன்னணி தேனி நகர அமைப்பாளா் கனகுபாண்டி, நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: தேனியில் பெரியகுளம் சாலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேல் சிதிலமடைந்த கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கட்டடத்தை சீரமைத்து, பணியாளா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
மேலும், புதிய நவீன தொழில்நுட்ப தீயணைப்பு, மீட்புப் பணிகளுக்கான உபகரணங்கள், புதிய வாகனம் வழங்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.