செய்திகள் :

``தீவிரவாதிகள் செய்த தவறுக்கு நாங்கள் ஏன் தண்டிக்கப்படுகிறோம்?'' - பாகிஸ்தானியர்கள் கேள்வி

post image

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்தத் தாக்குதலுக்கு  எதிராக உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதல்

அந்தவகையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும், மருத்துவ விசாவில் சிகிச்சைக்காக வந்தவர்கள் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் அதிரடியாக அறிவித்திருந்தது.

இதனால் இந்தியாவில் சிகிச்சைப் பெறும் பாகிஸ்தானியர்கள் பாதியிலேயே சிகிச்சைப் பெறுவதை நிறுத்திக்கொண்டு நாடு திரும்பும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். “நாங்கள் 45 நாள் விசாவைப் பெற்றுக்கொண்டு இந்தியா வந்தோம்.  இப்போது திடீரென்று நாட்டை விட்டு வெளியேறும்படி சொல்கிறார்கள்.

பாகிஸ்தானியர்கள் எழுப்பும் கேள்வி
பாகிஸ்தானியர்கள் எழுப்பும் கேள்வி

நாங்கள் என்ன தவறு செய்தோம்? தீவிரவாதிகள் செய்த தவறுக்கு நாங்கள் ஏன் தண்டிக்கப்படுகிறோம்?" என்று இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பாகிஸ்தானியர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக சட்டமன்றத்தில் மசோதா; காவல்துறைக்கு புதிய அறிவிப்புகள்!

தமிழக அரசின் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத வழக்கில், ஏப்ரல் 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு... மேலும் பார்க்க

Canada: தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரூடோவின் கட்சி; ஆட்சிக்கு வரும் கார்னி! - காத்திருக்கும் சாவல்கள்

நாடு முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் கிளம்ப...2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி, தனது கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஜஸ்டின் ட்ரூடோ. 2015-ம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றப் போது, இவர் த... மேலும் பார்க்க

``இணைப்பு சாலை இல்லாத பாலம்.. போராடி வாங்கியும் தினமும் திண்டாட்டம் தான்..'' - குமுறும் மக்கள்

சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி மற்றும் அதை சுற்றி பல கிராமங்களில் 50 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2007 காலகட்டத்தில், இந்த பகுதியில் ரயில்வே பாலத்துக்கு கீழே ஒரு நபர் மட்டும் சென்று வரும... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒருநாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்.. பால் குடித்தால் உடல் எடை கூடுமா?

Doctor Vikatan: சராசரி நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்... குறிப்பாக, பெண்கள் எவ்வளவு பால் குடிக்கலாம்... பால் குடித்தால் வெயிட் அதிகரிக்குமா... சைவ உணவுக்காரர்கள்கால்சியம் தேவைக்கு பாலையே ந... மேலும் பார்க்க

``அது நடந்தால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்'' - பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்

'இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் வந்துவிடுமா?' - ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, உலகம் முழுக்க இருக்கும் பரபர கேள்வி இது.'தக்க நடவடிக்கைகள் எடுப்போம்' என்று இந்தியா அடுத்தடுத... மேலும் பார்க்க