செய்திகள் :

துடரும் பட வில்லனுக்கு குவியும் பாராட்டுகள்: முதல் படத்திலேயே அசத்திய பிரகாஷ் வர்மா!

post image

துடரும் படத்தின் வில்லன் பிரகாஷ் வர்மாவை (52) ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரையில் வெளியானது.

ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமான பிரகாஷ் வர்மா படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுவருகிறார்.

இந்தப் படம் இன்று (மே.30) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது, ரசிகர்கள் மீண்டும் பிரகாஷ் வர்மாவின் நடிப்பை மிகவும் புகழ்ந்து வருகிறார்கள்.

யார் இந்த பிரகாஷ் வர்மா?

மக்களிடம் கவனத்தை ஈர்த்த ஓடோஃபோனின் ஜூஜூஸ், பிஸ்லேரி, கிட் கேட் போன்ற விளம்பரங்களை இவர் இயக்கியுள்ளார்.

பிரபல மலையாள இயக்குநர் ஏ.கே.லோகிததாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

தயாரிப்பாளராக இருந்துவரும் இவர் அமெரிக்க இயக்குநருக்காகவும் ஒரு விளம்பரத்தை இயக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

நாம் எதிரிகள் கிடையாது: கமலுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்வர்!

கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடி... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டியிலிருந்து மேக்ஸ்வெல் ஓய்வு!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு கவனம் செ... மேலும் பார்க்க

தம்பிகளா தள்ளிப்போய் விளையாடுங்க... யாரைச் சொல்கிறார் தனுஷ்?

குபேரா இசைவெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியது ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட நாள்களாக படப்பிடிப்பில் இருந்த படமென்... மேலும் பார்க்க

தக் லைஃப் சிறப்பு போஸ்டர்!

தக் லைஃப் திரைப்படம் வெளியாக மூன்று நாள்களே உள்ள நிலையில், சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு... மேலும் பார்க்க

முதல்முறையாக மேக்னஸை தோற்கடித்த குகேஷ்!

நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்செனை இந்திய வீரர் டி.குகேஷ் தோற்கடித்துள்ளார்.நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியின் ... மேலும் பார்க்க

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமாகியுள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான விக்ரம் சுகுமாரன் நேற்று (ஜூன் 1) இரவு மாரடைப்பால் காலமானார். இவர் ‘மதயானைக் கூட்டம்’, ‘இராவண கோ... மேலும் பார்க்க